146 வருட கிரிக்கெட் வரலாற்றை புரட்டிப்போட்ட KING கோலி - இமாலய சாதனை..!!

Kumar Sangakkara Virat Kohli Cricket Cricket Record
By Karthick Dec 29, 2023 06:33 AM GMT
Report

146 வருட கிரிக்கெட் வரலாற்றில் எந்த வீரரும் படைக்காத சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

இந்திய அணி

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

virat-crosses-2k-for-record-7th-time-in-146years

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை பெற்றிருந்தாலும் விராட் கோலி இப்போட்டியில் முதல் இன்னிங்க்ஸில் 38 ரன்களும், இரண்டாம் இன்னிங்ஸில் 76 ரன்களும் குவித்தார்.

146 ஆண்டுகளில்...

இதுவரை சர்வதேச போட்டிகளில் ஒரே ஆண்டில் 2000 ரன்களை ஏழு முறை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். இதற்கு முன்னர் இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் குமார் சங்ககாரா ஒரே ஆண்டில் ஆறு முறை 2000 ரன்களை கடந்து இருந்தார்.

virat-crosses-2k-for-record-7th-time-in-146years

இந்த சாதனையை 2019ஆம் ஆண்டு சமன் செய்த நிலையில் தற்போது இந்த வருடம் 2048 ரன்கள் குவித்ததன் மூல்ம் சங்ககாராவின் சாதனையயை முறியடித்துள்ளார்.

விராட் கோலி 2000 ரன்களை கடந்த ஆண்டுகள் பின்வருமாறு

2012 - 2186 ரன்கள்

2014 - 2286 ரன்கள்

2016 - 2595 ரன்கள்

virat-crosses-2k-for-record-7th-time-in-146years

2017 - 2818 ரன்கள்

2018 - 2735 ரன்கள்

2019 - 2455 ரன்கள்

2023 - 2048 ரன்கள்