கை தட்டாத அனுஷ்கா..!! கடுப்பான கோலியின் செயல்..!! WC ODI'யில் இது தான் முறை!!
நேற்றைய நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்தியா பேட்டிங்
உலகக்கோப்பை தொடரின் கடைசி லீக் போட்டியில், இந்திய அணி நெதர்லாந்து அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து, நெதர்லாந்து அணியை தும்சம் செய்ய துவங்கியது. ஒப்பனர்களான ரோகித் மற்றும் சுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் என அனைவரும் அரைசதங்களை கடந்தனர்.

ரோகித் 61 ரன், சுப்மன் கில், விராட் கோலி தலா 51 ரன் எடுத்து ஆட்டமிழக்க, கே.எல்.ராகுல் 64 பந்துகளில் 102 ரன்னும், ஷ்ரேயாஸ் ஐயர் 94 பந்தில் 124 ரன்களை விளாசினார். இந்த பங்களிப்பின் மூலம் இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 410 ரன்களை 4 விக்கெட்டுகளை இழந்து எடுத்தது.

பிறகு இமாலய ஸ்கோரை துரத்திய நெதர்லாந்து அணியில் வீரர்கள் கணிசமான இடைவேளையில் அவுட்டான நிலையில், அந்த அணி 47.5 ஓவர்களில் 250 ரன்னில் ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் கே.எல்,ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை தவிர்த்து அனைவரும் பந்துவீசினார்.
அனுஷ்கா - விராட் ருசிகரம்
இந்த போட்டியில் பந்துவீசிய போது, மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் விராட் கோலிக்கு இடையே ருசிகரமான சம்பவம் ஒன்று நடைபெற்றது. அதாவது முதல் ஓவரை விராட் வீசி 7 ரன்கள் விட்டுக் கொடுத்தார். ஓவர் முடிவில் மனைவி அனுஷ்காவை பார்த்த விராட், அவர் கை தட்டவில்லை என்பதை கண்டு, ஏன் கை தட்டக் கூடாதா? என சைகை செய்தார்.
ஆனாலும், அனுஷ்கா சர்மா கை தட்டவில்லை. அதன் பிறகு இரண்டாவது ஓவரை வீசிய விராட், அந்த ஓவரில் யாரும் எதிர்பாராத விதமாக நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸை வீழ்த்தி அசத்தினார். இந்த சம்பவத்தை கண்ட அனுஷ்கா கலோரியில் இருந்து கை தட்டி தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.
இந்த வீடியோக்கள் தற்போது சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகின்றது. இதில் குறிப்பிடத்தக்க விஷயமென்னவென்றால், இது தான் விராட்டின் முதல் உலகக்கோப்பை விக்கெட் .
அமெரிக்க தூதுக்குழுவை தடுத்த ட்ரம்ப்! அர்த்தமற்ற விடயங்களுக்காக 18 மணி நேர விமானப் பயணங்கள் வேண்டாம் IBC Tamil
30 வருடங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ள காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க திட்டம் IBC Tamil