உலக பணக்காரர்கள் வரிசையில் தமிழக அமைச்சர்கள்.. விராலிமலை ரகசியம் வெளிவரும் - டிடிவி தினகரன்
மக்கள் பணத்தை கொள்ளையடித்து தமிழக அமைச்சர்கள் அனைவரும் உலக பணக்காரர்கள் வரிசையில் இடம்பிடித்திருக்கிறார்கள் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியிருக்கிறார். புதுக்கோட்டை மாவட்டம் கந்தரவக்கோட்டையில் டிடிவி தினகரன் பிரச்சாரம் செய்து வருகிறார்.
அப்போது அவர் பேசுகையில், கொரோனாவில் இருந்து கொள்ளையடித்ததை கண்டு உலக நாடுகள் மிரண்டு விட்டது. கொள்ளையடிக்கப்பட்ட மக்கள் பணம் அனைத்தும் விராலிமலையில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கரிடம் அம்பானி மற்றும் அதானி கூட பிச்சை எடுக்க வேண்டும்.
இன்னும் 2 மாதங்களில் விராலிமலை ரகசியம் வெளியே வரும்.
ரேஷனில் பொருட்கள் வாங்க கூட லஞ்சம் கொடுக்க வேண்டி இருக்கிறது. முதியோர் ஒய்வு ஊதிய திட்டத்தையே ஒழுங்காக கொடுக்காத எடப்பாடி பழனிசாமி, இல்லத்தரசிகளுக்கான உரிமை தொகையை எவ்வாறு தருவார்” என்று பேசினார்.