குழந்தையின் சேட்டையான ஆட்டம் - வைரலாகும் வீடியோக்கள்
குழந்தை என்றால் அனைவருக்கும் பிடிக்கும் அதுவும் குறும்புகள் நிறைந்த சேட்டை செய்யும் குழந்தைகள் என்றால் சொல்லவா வேணும்.
குழந்தைகள் என்றால் விளையாட்டு,அழுகை என்று இருந்த வந்த நிலையில் தற்போது அந்த நிலைமை மாறி வருகிறது. வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் பிறக்க கூடிய குழந்தைகள் தற்போது அட்வான்ஸாக மாறி உள்ளனர்.
பெரும்பாலான குழந்தைகள் அழும் பொழுது பெற்றோர் நிலாவை காட்டி உணவு ஊட்டிய காலம் போய் தற்போது மொபைலை காட்டி உணவு ஊட்ட கூடிய காலமாக மாறியுள்ளது. அண்மை காலாமாக மொபைல் போன் பயன்படுத்து குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் அழுது கொண்டிருந்த குழந்தை ஒன்று தீடிரென டிவியில் ஒளிப்பரப்பான நடிகர் விஜய் நடிப்பில் வெளியான அரபிக் குத்து பாடலை கேட்டு தன் அழுகையை நிறுத்தியது பின் பாடல் முடிந்த பிறகு மீண்டும் தன் அழுகையை தொடரந்தது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது.
இதைத்தொடர்ந்து தற்போது மற்றொரு குழந்தை ஒன்று தன் பெற்றோர் சொல்வதை கேட்டு தன் இடுப்பை ஆட்டி நடனம் ஆட முயலுகிறது. தந்தை இடுப்பை ஆட்டு என்று சொன்னவுடன் சிரித்துக்கொண்டே படுத்திருந்தவாறு தன் இடுப்பை ஆட்டி நடனம் ஆட முயன்ற காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.