நாய்களை துன்புறுத்திய காவலாளியை பிரம்பால் வெளுத்து வாங்கிய ஆசிரியை - வைரலாகும் வீடியோ

Viral Video Uttar Pradesh
By Nandhini 3 மாதங்கள் முன்

காவலாளியை ஆசிரியர் ஒருவர் பிரம்பால் தர்ம அடி கொடுக்கும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பிரம்பால் வெளுத்து வாங்கிய ஆசிரியை

அந்த வீடியோவில், உத்திரப் பிரதேச மாநிலம், நொய்டாவில், எல்.ஐ.சி. வளாக குடியிருப்புப் பகுதியில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். தினமும் அந்த காவலாளி நாய்களை மிகவும் துன்புறுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது.

இதனையடுத்து பிரம்பை எடுத்து வந்த அந்த ஆசிரியை காவலாளியை மிரட்டுக்கிறார்.

அப்போது இருவருக்குள்ளும் வாக்குவாதம் முற்றுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அந்த ஆசிரியை பிரம்பை எடுத்து காவலாளியை வெளுத்து வாங்குகிறார்.

வைரல் வீடியோ

இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.