திருச்சியில் பள்ளி வகுப்பறையை சுத்தம் செய்து, வர்ணம் பூசி அழகுப்படுத்திய 12-ம் வகுப்பு மாணவர்கள் - குவியும் பாராட்டு
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், திருச்சி மாவட்டம், லால்குடி அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், வகுப்பறையை சுத்தம் செய்து, சுவர்களுக்கு வர்ணம் பூசி அழகுப்படுத்தியுள்ளனர்.
இந்த வீடியோவை சுகுணா சிங் ஐ.பி.எஸ் அவர்கள் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நேற்று கோவையில் அரசு பள்ளி மாணவர்கள் ஒண்டிப்புதூர் பேருந்து நிலையத்தில் இரு குழுவாக பிரிந்து சராமரியாக அடித்துக் கொண்ட வீடியோவும், சமூகவலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதற்கு முன்தினம் பேருந்திற்காக மாணவிகள் காத்துகொண்டிருந்த போது திடீரென இரு தரப்பு மாணவிகளுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, மாணவிகள் ஒருவருக்கொருவர் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டனர். இந்த குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்ட கல்லூரி மாணவிகள் 10 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் நடைபெற்றது.
இந்நிலையில், இப்படியும் மாணவர்கள் இருக்கிறார்கள்.இதே பண்பும் குணமும் எல்லா மாணவர்களிடத்திலும் பரவவேண்டும்..இவர்களின் எதிர்காலம் சிறக்க உளமார்ந்த வாழ்த்துக்கள்..வாழ்க வளமுடன் நலமுடன்.. என்று சமூகவலைத்தளங்களில் பலர் இந்த மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி அரசு பள்ளியில் வகுப்பறையை சுத்தம் செய்து, சுவர்களுக்கு வர்ணம் பூசி புதுப்பொலிவுறச் செய்த 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாராட்டுகள். pic.twitter.com/nbcUxc9dmW
— Suguna Singh IPS (@sugunasinghips) April 29, 2022