வாய்ப்பு கொடுத்த இயக்குனர் லோகேஷிற்கு நன்றி..! வைரலாகும் Leo hyena பேட்டி!!

Vijay Lokesh Kanagaraj Leo
By Karthick Oct 11, 2023 10:16 AM GMT
Report

லியோ படம் வரும் 19-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் மீது எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகளவில் இருந்து வருகிறது.

லியோ

விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் மிக பெரிய பட்ஜெட்டில் சஞ்சய் தத், அர்ஜுன், திரிஷா என பலர் நடித்துள்ள படம் "லியோ". 19-ஆம் தேதி வெளியீட்டிற்கு தயாராகும் இந்த படத்தின் ட்ரைலர் சில தினங்கள் முன்பு வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

viral-video-of-leo-hyena-interview

ட்ரைலரில் இடம்பெற்றுள்ள hyena என்கிற கழுதை புலியின் காட்சிகள் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. படத்தில் நடித்ததை குறித்து கழுதை புலி பேசுவது போல இந்த வீடியோ வெளியாகியுள்ளது.

Hyena பேட்டி

அதில், அந்த கழுதை புலி படத்தில் நடித்தது தனது வாழக்கையில் மறக்கமுடியாத அனுபவம் என்றும், தனித்துவமான கதாபாத்திரமான அதில் விஜயுடன் நடித்து மிக சிறப்பான அனுபவம் என்றும் அந்த கழுதை புலி தெரிவிப்பது போல எடிட் செய்யப்பட்டுள்ளது.

பல வகையில் தற்போதைய நெட்டிசன்கள் ட்ரெண்ட் வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில், லியோ படம் ட்ரெண்டிங்கில் இந்த வீடியோவும் தற்போது இடம்பெற்று வைரலாகி வருகின்றது.