கைகுலுக்க காத்திருந்த பாகிஸ்தான் வீரர்கள்.. கண்டுகொள்ளாத இந்திய வீரர்கள்?
இந்திய அணிக்கு எதிரான போட்டிக்கு பின்னர் பாகிஸ்தான் வீரர்கள் கைகுலுக்க காத்திருந்ததாக வீடியோ வெளியாகி விவாதங்களை தூண்டியுள்ளது.
கைகுலுக்காத நடைமுறை
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிறகு அதிகரித்த அரசியல் பதட்டங்களுக்கு இடையில், இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் கைகுலுக்காதது உள்ளிட்ட சில முடிவுகள் எடுக்கப்பட்டன.
Shaheen Shah Afridi and Usman Tariq kept waiting for the Indian team to shake hands.
— Rohan💫 (@rohann__45) February 16, 2026
Chad Indian team didn’t even look at them.🗿💀
Unreal beizzati of Pakistanis.😭🤣🔥#INDvsPAK pic.twitter.com/UKf9DrBE8V
நடப்பு டி20 உலகக்கோப்பையிலும் கேப்டன்கள் கைகுலுக்காத நடைமுறை தொடர்ந்தது. கடந்த 15ஆம் தேதி நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் படுதோல்வியடைந்தது.
போட்டி முடிந்ததும் ஷாஹீன் அஃப்ரிடி, உஸ்மான் தாரிக் இருவரும் கைகுலுக்க காத்திருந்ததாக வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. இது இந்திய வீரர்கள் அவர்களை கண்டுகொள்ளாதது போன்ற விவாதங்களை ஏற்படுத்தியது.

சில வினாடிகள் நின்று
பெவிலியனுக்கு செல்லும் முன்பு அஃப்ரிடி, உஸ்மான் சில வினாடிகள் நின்று பின்னே திரும்பி பார்க்கின்றனர்.
ஆனால், அவர்கள் காத்திருந்ததற்கான தெளிவான காட்சி உறுதிப்படுத்தல் இல்லை. பின்னர் இந்தியாவின் கைகுலுக்காத நிலைப்பாடும் விளக்கப்பட்டது.
அதாவது, கடந்த ஆண்டு நடந்த ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுடன் இந்தியா கைகுலுக்காத கொள்கையை பின்பற்றி வருகிறது.

யாழில் ஆலயம் செல்ல தனியாரின் காணிக்குள் பாதை அமைக்கும் இராணுவம் : காணி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு IBC Tamil
இங்கிலாந்தில் பல்கலைக்கழகங்களில் உரையாற்றவுள்ள நாமல் :பிரிட்டன் தமிழ் மாணவர் அமைப்பு கடும் எதிர்ப்பு IBC Tamil