இந்த ரணகளத்திலும் கிளுகிளுப்பு கேக்குதா ? வைரலாகும் விளையாட்டு வீரரின் ப்ரோபோசல் வீடியோ
எஸ்டோனியாவில் நடைபெற்ற விளையாட்டு நிகழிச்சியில் வீரர் ஒருவரின் ப்ரோபோசல் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐயன் மென் யூரோப்
ஐரோப்பியாவில் நேற்று "ஐயன் மென் யூரோப்" என்ற டிரையத்லான் விளையாட்டு போட்டி ஒன்று நடைப்பெற்றது. இந்த போட்டியானது தடகளம், நீச்சல் மற்றும் சைக்கிள் என்று மூன்று வெவ்வேறு நிகழ்வுகளை உள்ளடக்கிய போட்டியாகும்.
இதில் ஆண்களுக்கான 40 - 44 வயது பிரிவில் கிறிஸ்டியன் மோரியடேல் என்பவரும் கலந்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் கிறிஸ்டியன் மோரியடேல் தனது பெண் தோழியிடம் ப்ரோபோசல் செய்கிறார்.
கால் வலியிலும் காதல்
இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் கிறிஸ்டியன் மோரியடேல் மண்டியிட்டு தான் வைத்துள்ள மோதிரத்தை தன் தோழியிடம் காட்டி ப்ரோபோசல் செய்ய முயல்கிறார்.ஆனால் அவர் காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணத்தினால் அவரால் நிற்க முடியவில்லை.
இதனால் அங்குள்ள தன்னார்வலர்கள் இருவர் கிறிஸ்டியன் மோரியடேலின் கையை பிடித்து நிறுத்தி அவருக்கு உதவி செய்கின்றனர். இதனையடுத்து கிறிஸ்டியன் மோரியடேல்,தோழியிடம் தன் காதலை வெளிப்படுத்துகிறார்.
அதனை கேட்டு அப்பெண் ஆம் என்ற பதிலை கூறி தன் காதல் சம்பத்தை தெரிவித்தார். இதனைக்கண்டு அக்கூட்டத்தில் இருந்த பலரும் கைகள் தட்டி காதல் ஜோடிகளை உற்சாக படுத்தினர். இந்த வீடியோ பதிவானது இன்ஸ்டாகிராமில் 1,90,000 லைக்குகள் மற்றும் 39,44,000 பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.