பெண்களை மிகவும் கொச்சைப்படுத்திய விளம்பர வீடியோ - இந்திய அளவில் வலுக்கும் கண்டனங்கள்

Viral Video India
By Nandhini Jun 06, 2022 09:13 AM GMT
Report

இணையத்தில் ஒரு விளம்பர வீடியோ வைரலாக பரவி வருகிறது. அந்த விளம்பரத்தில் பெண்களை கொச்சைப்படுத்துவது போல் இருப்பதால் இந்த விளம்பர வீடியோவிற்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

சமீப காலமாக சில விளம்பரங்களில் பெண்களை கொச்சைப்படுத்துவது போன்ற பல விஷயங்கள் காட்டப்பட்டு வருகிறது.

பெண்களை மிகவும் கொச்சைப்படுத்திய விளம்பர வீடியோ - இந்திய அளவில் வலுக்கும் கண்டனங்கள் | Viral Video India

சர்ச்சையில் சிக்கிய விளம்பர வீடியோ 

இந்நிலையில், தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோரில் 4 இளைஞர்கள் ஒரு பெண்ணை பின் தொடர்ந்து செல்கிறார்கள். நாம் நான்கு பேர் இருக்கிறோம் இங்கு ஒன்றுதான் இருக்கிறது என்று அவர்கள் இரு பொருள்பட பேசுவதை கேட்டு அப்பெண் அதிர்ச்சி அடைகிறாள். பின்பு தான் தெரிகிறது அந்த இளைஞர்கள் குறிப்பிட்ட ஒரு கம்பெனியின் பெர்ஃப்யூமை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று...

இந்த விளம்பர வீடியோவைப் பார்த்த பலர் பெண்களை கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளது என்று பலர் தங்களது எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.