மனைவிக்கு 2வது இடமா? ஆத்திரத்தில் அழகிப் போட்டி கிரீடத்தை உடைத்த கணவன்

Brazil
By Sumathi May 31, 2023 10:19 AM GMT
Report

தனது மனைவி வெற்றி பெறாததால் கணவர் அழகிப் போட்டி கிரீடத்தை உடைத்துள்ளார்.

அழகிப் போட்டி 

பிரேசில் நாட்டில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான மிஸ் பிரேசில் அழகிப் போட்டி நடைபெற்றது. பல்வேறு கட்ட தேர்வுகளின் அடிப்படையில் இரண்டு பேர் மிஸ் பிரேசிலுக்கான இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தனர். நதாலி பெக்கர் மற்றும் எமானுவெலி பெலினி இருவரும் மேடைக்கு ஏறினர்.

மனைவிக்கு 2வது இடமா? ஆத்திரத்தில் அழகிப் போட்டி கிரீடத்தை உடைத்த கணவன் | Viral Video Husband Breaks Beauty Crown Brazil

அப்போது, பெலினி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு கிரீடம் சூட்டப்பட இருந்தது. தொடர்ந்து, திடீரென மேடையில் ஏறிய நதாலியின் கணவர் பெலினிக்கு சூட்டப்பட இருந்த கிரீடத்தை பிடுங்கி தரையில் வீசியுள்ளார்.

அதிர்ச்சி வீடியோ

இதில் அந்த கிரீடம் துண்டு துண்டாக உடைந்தது. மேலும், மேடையில் இருந்தவர்களோடு தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டுள்ளார். இதனால் பார்வையாளர்கள், நடுவர்கள் மற்றும் விழா ஏற்பாட்டாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

நடுவர்கள் சரியான தீர்ப்பை வழங்கவில்லை நதாலியின் கணவர் குற்றம் சாட்டினார். உடனடியாக மேடையேறிய பாதுகாவலர்கள் அந்த மனிதரை மேடையில் இருந்து கீழே இறக்கினர். இதுகுறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.