Thursday, Jul 10, 2025

‘’நன்றி வணக்கம் மக்களே , மீண்டும் சந்திப்போம் ‘’ - வைரலாகும் யானை டச்சிங் வீடியோ

elephant viralvideo
By Irumporai 4 years ago
Report

மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான உறவு என்பது எப்போதும் தனித்துவமானது. மனிதனைக் காட்டிலும் அன்பிலும், குறும்புத்தனத்திலும் விலங்குகள் எப்போதும் அதிகளவிலே காட்டும். அந்த வரிசையில் யானையின் அன்பும், குறும்புத்தனம் அலாதியானது.

இந்த நிலையில், காட்டுப்பாதையில் சாலையை கடந்த யானை கூட்டத்தின் சீனியர் யானை ஒன்று, வாகனங்களில் காத்திருந்த மனிதர்களுக்காக நன்றி தெரிவித்த வீடியோ இப்போது வைரலாகி உள்ளது.

இந்த வீடியோ பதிவினை இந்திய ஐ.எஃப்.எஸ் அதிகாரி  தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் :

அந்த வீடியோவில் கூட்டமாக சாலையைக் கடக்கும் யானைகளுக்கு வழிவிட்டு தூரத்தில் வாகனங்களோடு நிற்கின்றனர் மக்கள். சாலையைக் கடந்துவிடும் யானைகளின் கூட்டத்தின் கடைசி யானை, வாகனங்கள் நின்று கொண்டிருந்த பக்கத்தை திரும்பி பார்த்து தும்பிக்கையை தூக்கி நன்றி தெரிவிக்கும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ இப்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. விலங்கு ஆர்வலர்களும், யானை விரும்பிகளும் வீடியோவை பார்த்து அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர்