என் மகனே வென்று வா” : முத்தமிட்டு குட்டியை காட்டிய கொரில்லா.. வைரலாகும்வீடியோ
தாய்ப்பாசம் என்று வந்துவிட்டால் மனிதர்கள் விலங்குகள் என்று பேதம் ஏதும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். சமூக வலைதளங்களில் சில காட்சிகள் வெளியாகின்றன அந்த வகையில் கனடாவில் உள்ளது பிரபலமான கால்கேரி உயிரியல் பூங்கா. இங்குள்ள கொரில்லா குரங்கு ஒன்று சமீபத்தில் தான் குட்டியை ஈன்றது.
அதனால் சதா சர்வ காலமும் குட்டியை கவ்விக் கொண்டே திரிகிறதாம் அந்த கொரில்லா குரங்கு. அப்படித்தான் சமீபத்தில் அந்தப் பூங்காவிற்கு குழந்தைகள் அதிகமாக வந்துள்ளனர்.
அப்போது அந்த கொரில்லா குரங்கு தனது குட்டியை கையில் ஏந்தி நெற்றியில் முத்தமிட்டு உச்சி முகர்ந்து பின்னர் அக்குட்டியை பார்வையாளர்களுக்கு உயர்த்திக் காட்டியுள்ளது. இந்தக் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது
இந்த கொரில்லாவின் நடவடிக்கைகள் அத்தனையும் மனிதரை ஒத்திருப்பதாகக் கூறி நெகிழ்கின்றனர் நெட்டிசன்கள். அதேவேளையில் இன்னும் சிலர் எத்தனை அழகாக வாழ்கிறது
அந்த கொரில்லா. அதை மனிதர்களுக்கு காட்சிப் பொருளாக்குவதற்காக உயிரியல் பூங்காக்களில் இப்படி அடைத்து வைப்பது எப்படி நியாயம் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்