உங்கப்பன் மவனே வாடா : குட்டியை முதல்முதலாக பார்க்கும் ஒட்டகச்சிவிங்கி... வைரலாகும் வீடியோ

By Irumporai May 28, 2022 11:10 AM GMT
Report

ஒட்டக சிவிங்கி ஒன்று புதிதாக பிறந்த தன் மகனை பார்த்து தனது மனைவிக்கு முத்தம் கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது .

இந்த உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் பொதுவாக இருக்கும் குணம் ஒன்று அதுதான் அன்பு , இந்த அன்பு மனிதர்களிடம் மட்டும் அல்ல சில நேரங்களில் விலங்குகள் தங்களின் உறவுகளிடம் காட்டும் அன்பு மனிதர்களாகிய நம்மை சிலிர்ப்படைய செய்யும்.

ஆம் அந்த வகையில் தற்போது தந்தை ஒட்டகச்சிவிங்கி ஒன்று தனது குட்டியை முதல்முதலாக பார்ப்பதும், தாய் ஒட்டகச்சிவிங்கிக்கு முத்தம் கொடுக்கும் வீடியோ வைரலாகியுள்ளது. இந்த வீடியோவானது அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான்டா பார்பரா உயிரியல் பூங்காவில் வீடியோ எடுக்கப்பட்டது.

இது முதலில் 2020இல் வெளியிடப்பட்டாலும் தற்போது மீண்டும் வைரலாகிவருகிறது. அந்த வீடியோவில், ஒரு தந்தை ஒட்டகச்சிவிங்கி அடைப்புக்குள் நுழைந்து, புதிதாகப் பிறந்த மகனைத் தேடுகிறது.

ஒருவழியாக தனது குட்டியை பார்த்த பிறகு தாய் ஒட்டகச்சிவிங்கிக்கு காதலுடன் முத்தம் கொடுக்கிறது. தந்தை ஒட்டகச்சிவிங்கிக்கு மைக்கேல் என்றும் குட்டி ஒட்டகச்சிவிங்கிக்கு ட்விகா என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவான்வது 1.4 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைகடந்துள்ளது தந்தை-மகன் இருவரின் முதல் சந்திப்பு எவ்வளவு அழகாக இருக்கிறது என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர்