சிங்கத்தின் ஒற்றை பார்வையால் மிரண்டு ஓடிய ஓநாய்கள் - வைரலாகும் வீடியோ
சிங்கத்தின் ஒற்றை பார்வையால் கண்டு ஓநாய்கள் ஓடும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
மனிதர்களிடையே உள்ள வெவ்வேறு வகையான வாழ்க்கை முறைகளை போலவே வீட்டு மற்றும் காட்டு விலங்குகளின் வாழ்க்கை முறையும் பல்வேறு வேறுபாடுகளை கொண்டது. இவற்றை நாம் நேரடியாகவோ அல்லது வீடியோக்களிலோ பார்க்கும் போது நிச்சயம் ஆச்சரியத்தில் மூழ்குவோம் என்பதே உண்மை.
When small handle on twitter try to share the tweet before the influencer......#TuesdayFeeling pic.twitter.com/fRrF875p6Z
— WildLense® Eco Foundation ?? (@WildLense_India) January 25, 2022
அந்த வகையில் காட்டுக்கே ராஜா எனப்படும் சிங்கத்தின் வாழ்க்கை முறை என்பது முற்றிலும் மாறுபட்டது. இந்த வீடியோவில் வனப்பகுதி ஒன்றில் வேட்டை உணவை தின்று கொண்டிருக்கும் சிங்கத்தின் அருகில் 2 ஓநாய்கள் செல்கின்றன. அப்போது, தலையை கம்பீராக உயர்ந்து முறைத்து பார்க்கும் சிங்கத்தை பார்த்தவுடன், ஓநாய்கள் வந்த வழி தெரியாமல் பின்னோக்கி ஓடுகிறது.
இந்த வீடியோ காண்பவர்களை நிச்சயம் மெய்சிலிர்க்க வைக்கிறது என்பதே உண்மை.