வெறிநாய் கடித்ததில் பார்வை இழந்த சிறுமி - கண்கலங்க வைக்கும் வீடியோ வைரல்

Tamil nadu Viral Video
By Nandhini Aug 02, 2022 10:20 AM GMT
Report

வெறிநாய் கடித்ததில் பார்வை இழந்த சிறுமியின் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

வெறிநாய் தாக்குதல்

கிருஷ்ணகிரி மாவட்டம், அரசம்பட்டி அருகே உள்ள அரசு மகளிர் பள்ளி ஒன்று உள்ளது. இப்பள்ளியில் ஆசினி என்ற மாணவி 8ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று ஆசினி பள்ளியில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார்.

அப்போது, கழிவறைக்கு அருகில் இருந்த வெறிநாய் ஆசினியை தாக்கியது. வெறிநாய் பிடியில் ஆசினி சிக்கி வலி தாங்க முடியாமல் அலறி கத்தி கூச்சலிட்டார். அப்போது, ஆசினியின் அலறல் சத்தம் கேட்டு பள்ளியில் இருந்தவர்கள் ஓடி வந்து நாயை விரட்டி அடித்தனர்.

பார்வை இழந்த மாணவி

ஆசினியின் உடலில் பல இடங்களிலும், கண் பகுதியிலும் பலமாக நாய் கடித்திருந்தது. உடனடியாக மாணவியை மீட்டவர்கள் போச்சம்பள்ளி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதனையடுத்து, மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆசினியை வெறிநாய் கடித்ததில் கண்பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

எந்தவொரு முன்னேற்றம் இல்லாமல் ஆசினி தன் பார்வை இழந்துள்ளார். தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

viral video