திருமண வரவேற்பு ஊர்வலத்தில் கொட்டிய பணமழை - அள்ளி அள்ளி வீசிய நபர் - வீடியோ வைரல்

Viral Video
By Nandhini Jun 14, 2022 08:20 AM GMT
Report

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ -

அந்த வீடியோவில் தெலுங்கானா, ஐதராபாத்தில் சார்மினார் அருகே திருமண வரவேற்பு ஊர்வலம் நடைபெற்றது. அந்த திருமண ஊர்வலத்தில் ஒருவர்  நிறைய கத்தை கத்தையாக ரூ.500 பணத்தாளை தூக்கி காற்றில் வீசினார். 

இதை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோ வைரலானதையடுத்து, போலீசார் சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த நபர் விசாரணையில், திருமண நிகழ்வை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் பணத்தாளை தூக்கி வீசியதாக கூறியுள்ளார். 

திருமண வரவேற்பு ஊர்வலத்தில் கொட்டிய பணமழை - அள்ளி அள்ளி வீசிய நபர் - வீடியோ வைரல் | Viral Video Cash Flow