மறைந்த தாயின் புகைப்படத்துடன் மணமேடைக்கு வந்த மணப்பெண் - நெகிழ்ந்த உறவினர்கள்
மணப்பெண் ஒருவர் தனது மறைந்த தாயின் புகைப்படத்தை கையில் வைத்தவாறு திருமணத்தில் கலந்து கொண்டுள்ள நெகிழ்ச்சி சம்பவம் பாகிஸ்தானில் நடந்துள்ளது.
பிரபல புகைப்பட கலைஞர் மகா வஜாகத் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். 57 வினாடிகள் ஓடக் கூடிய இந்த வீடியோவில் பாகிஸ்தானை சேர்ந்த மணப்பெண் ஒருவர் தனது மறைந்த தாயின் புகைப்படத்தை கையில் வைத்தவாறு திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார்.
தனது தாயார் மறைந்த நிலையில் அவரது முன்னிலையில் திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காக ஒருகையில் தாயின் புகைப்படமும், மறுகையில் தந்தையின் கரத்தை பிடித்துக் கொண்டு மணமேடைக்கு மணப்பெண் வருகிறார்.
இதனைப் பார்த்த இணையவாசிகள் பலரும் இந்த வீடியோவை பார்க்கும் போதெல்லாம் அழுகை வருகிறது. தாய் என்பது இறைவன் கொடுத்த மிகச்சிறந்த வரம். இந்த வீடியோவை பார்க்கும்போது என் தாயை நினைத்துப் பார்க்கிறேன். பெண்களுக்கு இதுபோன்ற நிகழ்வு எல்லாம் துயரமான தருணம். என் தாய் இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியவில்லை என மனமுருகி கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.