விலை கொடுத்து வாங்கி பறவைகளை சுதந்திரமாக பறக்க விட்ட நபர்... - வைரலாகும் வீடியோ
விலை கொடுத்து வாங்கிய பறவைகளை சுதந்திரமாக வானத்தில் பறக்க விட்ட நபரின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் வீடியோ
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ஒருவர் பறவைகளை கூண்டுக்குள் அடைத்து அதை விற்றுக் கொண்டிருக்கிறார். அங்கு காரில் வந்த ஒரு நபர் அந்த பறவைகள் மொத்தத்தையும் விலை கொடுத்து வாங்கினார். அந்த பறவைகளை அவர் ஒவ்வொன்றாக வாங்கி வானத்தில் பறக்க விட்டார். இதை அங்கிருந்த சிலர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர்.
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
This man is buying birds just to set them free? pic.twitter.com/V2PW4lBTba
— B&S (@____B_S____) October 1, 2022