மேடையில் ராகேஷ் திகாத் மீது தாக்குதல் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

Viral Video
By Nandhini May 30, 2022 01:37 PM GMT
Report

பாரதிய கிசான் யூனியனின் தலைவரும், வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்தவரான ராகேஷ் டிகைத்.

விவசாயிகள் போராட்டத்தில் கர்நாடக விவசாயி ஒருவர் பணம் கேட்டு பிடிபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து பேசுவதற்காக பெங்களூருவில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அப்போது, அவர் மேடையில் அமர்ந்து கொண்டிருந்தபோது, திடீரென வந்த நபர் ஒருவர் அவரை ஓங்கி தாக்குகிறார். அதன் பிறகு வந்த இன்னொரு நபர் அவர் மீது கருப்பு பேனா மையை எடுத்து அவர் மீது வீசுகிறார். 

இதனால், நிகழ்ச்சியின் போது பெரும் சலசலப்பு ஏற்பட்டு ஒருவரையொருவர் சராமரியாக தாக்கிக்கொண்டனர். 

இது குறித்த வீடியோ, புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.