பேத்தி மிருதியுடன் Reels செய்த நடிகர் செந்தில் - இணையத்தில் வைரலாகும் வீடியோ
தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் செந்தில். இவரும் நகைச்சுவை நடிகர் கவுண்டமணியும் சேர்ந்து பல நகைச்சுவை படங்களில் நடித்து மக்கள் மனதில் தனக்கென்று இடம் பிடித்தனர்.
இன்று வரை இவர்களுடைய நகைச்சுவைவிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. 1984ம் ஆண்டு நடிகர் செந்தில் கலைச் செல்வி என்பவரை திருமணம் செய்தார். இத்தம்பதிக்கு மணிகண்ட பிரபு, ஹேமசந்திர பிரபு என்ற இரு மகன்கள் உள்ளார்கள்.
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் நடிகர் செந்திலின் பேத்தி மிருதி, செந்தில் வசனத்தை ரீல்ஸ் செய்து அசத்தியுள்ளார்.
தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் செந்திலின் மூத்த பேத்தி மிருதி... pic.twitter.com/xPLZkSPcLU
— Film Food & Fun (@FilmFoodTravel) May 30, 2022