ஒரு பைக்கில் 4 குழந்தைகள், 2 பெண்களை ஏற்றி சென்ற நபர் - வைரலாகும் வீடியோ - மக்கள் அதிர்ச்சி
Viral Video
By Nandhini
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ -
அந்த வீடியோவில், ஒருவர் பைக்கில் அமர்ந்து 4 குழந்தைகள், 2 பெண்கள் ஏற்றி வாகனத்தை ஓட்டுகிறார். இதை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். இது என்ன பைக்கா அல்லது மாருதி காரா? ஒரே பைக்கில் இத்தனை பேரை பார்த்தாலே எங்கள் மனம் பதறுகிறது. ஆபத்தை அறியாமல் சிறு குழந்தைகளின் உயிரில் விளையாடாதீங்க... என்று கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.