300 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 18 மாத குழந்தை - போராடி உயிருடன் மீட்ட ராணுவத்தினர் - குவியும் பாராட்டு

Viral Video
By Nandhini Jun 09, 2022 10:26 AM GMT
Report

குஜராத் மாநிலம், துடாபூர் கிராமத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிவம் என்ற 18 மாத குழந்தை கடந்த 6ம் தேதி இரவு 8 மணிக்கு 300 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான்.

300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை

இதனால், அதிர்ச்சி பெற்றோர் கதறி அழுதனர். உடனே அங்கு கூடிய கிராம மக்கள், மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு அதிகாரிகளும், போலீசாரும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் குழுவினர் விரைந்து வந்தனர். குழந்தை 300 அடி ஆழ்கிணற்றில் 20 - 25 அடி ஆழத்தில் சிக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மீட்புப்பணி 

இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றி, இரவு 10.45 மணியளவில் குழந்தையை ஆழ்துளை கிணற்றிலிருந்து பத்திரமாக மீட்டெடுத்தனர்.

மீட்கப்பட்ட குழந்தையை திரங்காத்ரா நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது. குழந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மீட்பு பணி சுமார் 40 நிமிடங்களில் நிறைவடைந்தது.

தற்போது, உயிருடன் மீட்ட சிறுவனை ராணுவத்தினர் கட்டியணைத்து முத்தமிட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குழந்தையை பத்திரமாக மீட்ட குழுவினருக்கு நெட்டிசன்கள் தங்களுடைய பாராட்டுக்களை பதிவிட்டு வருகின்றனர்.