தன்னைத்தானே திருமணம் செய்த ஷாமா பிந்து வைரலாகும் வீடியோ
குஜராத்தை சேர்ந்த பெண் ஒருவர் அறிவித்த தேதியை விட 3 நாட்களுக்கு முன்பே தன்னைத்தானே திருமணம் செய்து கொண்டுள்ளார்.
தன்னைத்தானே திருமணம்
குஜராத்தில் உள்ள பரோடா பகுதியைச் சேர்ந்தவர் ஷாமா பிந்து (24 ). எம்.எஸ். பல்கலைக்கழகத்தில் சோஷியாலஜி பட்டம் பெற்றுள்ளார்.
தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஷாமாவும் மற்ற இந்திய பெண்களைப் போலவே ஜூன் 11ம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக அறிவித்தார். ஆனால், இத்திருமணம் மணமகன் இல்லாமல் தன்னையே திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார். திருமணம் முடிந்த பிறகு 2 வாரம் ஹனிமூனுக்கும், கோவாவுக்கும் செல்ல போவதாக தகவல் தெரிவித்தார்.
சர்ச்சை
இப்பெண்ணின் அறிவிப்பால், சலசலப்பும், சர்ச்சையும் ஏற்பட்டது. சமீபத்தில், தன்னைத் தானே திருமணம் செய்து கொள்ளும் திருமணங்கள் இந்து மதத்திற்கு எதிரானது.
இதனால் இந்துக்களின் மக்கள் தொகை குறையும். எந்தக் கோவிலிலும் இப்படியான திருமணம் நடக்க அனுமதிக்க மாட்டோம் என்று பாஜகவின் சுனிதா சுக்லா கருத்து தெரிவித்திருந்தார்.
வைரலாகும் வீடியோ -
இந்நிலையில், அறிவித்த தேதியை விட 3 நாட்களுக்கு முன்பே வதோதராவில் திருமணம் செய்து கொண்டுள்ளார் ஷாமா பிந்து. தற்போது தன்னைத்தானே திருமணம் செய்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.