ஒருவரை மட்டும் குறி பார்த்து வெறியோடு கடிக்க முயன்ற நாய்கள் - பதற வைக்கும் அதிர்ச்சி வீடியோ

Viral Video
By Nandhini Jun 04, 2022 07:19 AM GMT
Report

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில், ஒரு நபரை 3 நாய்கள் சேர்ந்து கடிக்க முற்படுகிறது. இதைப் பார்த்த சைக்கிளில் வந்த சிறுவன் உடனே இறங்கி அந்த நாய்களை துரத்த பார்க்கிறான். ஆனால், அந்த சிறுவனை ஒன்றும் செய்யாமல் குறி வைத்து அந்த நபரை மட்டும் தாக்க முற்படுகிறது அந்த நாய்கள். அந்த நாய் மட்டும் கிடையாது அதனுடன் இருந்த குட்டி நாய்கள் கூட அந்த நபரை கடிக்க முற்படுகிறது. 

ரொம்ப நேரமாக அந்த நபர் நாய்கள் பிடியிலிருந்து அவரால் மீளமுடியவில்லை. அதன் பின்னர், அந்த வழியாக வந்த சில நபர்கள் ஓடி வந்து நாய்களை துரத்தி விரட்டி அடிக்கின்றனர். 

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.