வளைவில் வளைந்து சென்ற வேன்... - திடீரென வேனின் பின்பகுதி உடைந்து விபத்து - பதற வைக்கும் சிசிடிவி காட்சி

Viral Video
By Nandhini Jun 01, 2022 07:09 AM GMT
Report

சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில் வேன் ஒன்று வேகமாக வந்துக்கொண்டிருக்கிறது. அந்த வேனில் 20க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். 

வேன் வளைவில் வளைந்து வந்த போது பளு தாங்க முடியாமல் வேனின் பின்பகுதி உடைந்து விழுந்து. இதில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்டோர் தூக்கி வீசப்பட்டனர். ஆனால், நல்லவேளையாக பின்னால் எந்த வாகனமும் வராததால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். 

தற்போது இது குறித்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.