கிரிக்கெட் விளையாட்டு அரங்கத்தையே அதிர வைத்த ஏ.ஆர்.ரகுமான் ‘வந்தே... மாதரம்...’ பாட்டு - வைரலாகும் வீடியோ
கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. அஹமதாபாத் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் குஜராத் - ராஜஸ்தான் அணிகள் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 39 ரன்கள் எடுக்க, குஜராத் அணியில் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை நோக்கி களம் கண்ட குஜராத் அணி 18.1 ஓவரிலேயே இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது.
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. கிரிக்கெட் விளையாட்டரங்கில் ‘வந்தே மாதரம்’ பாட்டை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பாட, கிட்டத்தட்ட லட்சக்கணக்கான மக்கள் இப்பாட்டை அவருடன் இணைந்து பாடினார்கள். அரங்கமே இப்பாட்டு முடியும்வரை பாடிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Vande Mataram ?? @arrahman's magical performance will touch your hearts. #TATAIPL | #GTvRR pic.twitter.com/ixvjn9vlRT
— IndianPremierLeague (@IPL) May 29, 2022