2-வது குழந்தைக்காக எதிர்நோக்கி காத்திருக்கும் நகுல் - ஸ்ருதி - வைரலாகும் வீடியோ - குவியும் வாழ்த்துக்கள்

Viral Video
By Nandhini May 24, 2022 11:34 AM GMT
Report

நடிகர் நகுல் தன் நீண்டகால காதலியான ஸ்ருதி பாஸ்கரை கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ம் தேதி திருமணம் செய்து கொண்டார். நகுலின் மனைவி சுருதி எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பவர்.

கணவர் மற்றும் குழந்தையுடன் சேர்ந்து எடுக்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அவ்வபோது சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றார்.

அதேபோல், மகள் அகிராவுக்கு 1 வயதாகியிருக்கும் நேரத்தில் பிரசவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டார் நகுலின் மனைவி ஸ்ருதி.

கர்ப்பமாக இருந்த ஸ்ருதி அகிரா என்கிற பெண் குழந்தையை பெற்றெடுத்தார். water birthing முறை மூலம் அவர் குழந்தையை பெற்றார். பிரசவத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நகுல் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.

இதனையடுத்து, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது குறித்து ஸ்ருதி பாஸ்கர் பேசியிருக்கிறார். அந்த வீடியோ வைரலாக பரவியது.  

இந்நிலையில், தற்போது 2-வது முறையாக நகுலின் மனைவி கர்ப்பமாக உள்ளார். தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, ஸ்ருதி ஒரு பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், நாட்கள் நெருங்க நெருங்க சிலிர்ப்பு & உற்சாகம்! என்று பதிவிட்டுள்ளார். 

இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நகுல் மற்றும் ஸ்ருதிக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.