சென்னையில் பட்டாக்கத்தியுடன் கேக் வெட்டி கொண்டாடிய இளைஞர்கள் - களத்தில் இறங்கிய போலீசார்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், சென்னையில் இளைஞர்கள் சிலர் பட்டாக் கத்தியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடி, லைக்குக்கு ஆசைப்பட்டு அதை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது.
வைரலாகி வரும் இந்த வீடியோ காட்சியை வைத்து போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள் யார் யார் என்று சென்னை காவல்துறை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவதை இளைஞர்கள் தவிர்க்க வேண்டும் என்று காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.