4 வயது சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய உதவி காவல் ஆய்வாளர் ராஜா - வைரலாகும் வீடியோ - குவியும் பாராட்டு

Viral Video
By Nandhini Apr 30, 2022 08:44 AM GMT
Report

சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே நகர காவல் துறையினர் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் வாகனசோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, அங்கு வந்த முஜாக்கீர் என்பவர் ரம்ஜான் தொழுகையை முடித்து விட்டு தன்னுடைய மகன் மூபஷ்ஷீர் (4) என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவரை நிறுத்தி வாகனத்துக்கான ஆவணங்களை கேட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, மகன் மூபஷ்ஷீர் வாணியம்பாடி நகர உதவி காவல் ஆய்வாளர் ராஜாவிடம் சென்று பேசினான்.

 அப்போது, உங்க தொப்பி அணிந்து... உங்க வாகனத்தில் என்னை ஏற்றி ஒரு சுற்று சுற்றி வாருங்கள் என்று தன்னுடைய ஆசையை கூறினான். சிறுவனின் ஆசையை நிறைவேற்ற உதவி காவல் ஆய்வாளர் ராஜா, தான் அணிந்திருந்த தொப்பியை கழட்டி சிறுவனின் தலையில் மாட்டி, சிறுவனை தனது இரு சக்கர வாகனத்தில் அமர வைத்து அங்கிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவிற்கு அழைத்துச் சென்று மீண்டும் பேருந்து நிலையத்தை அடைந்தார்.

தற்போது, இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

4 வயது சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ராஜாவிற்கு பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.