ரத்தம் சொட்ட, சொட்ட உயிருடன் கோழியை தோலுரித்து துன்புறுத்திய நபர் கைது - போலீசார் அதிரடி
Viral Video
By Nandhini
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ ஒன்று வைரலாக பரவியது. அந்த வீடியோவில், கோழியை உயிருடன் தோல் உரித்து துண்டு துண்டாக வெட்டி துன்புறுத்தி இருந்தது பதிவாகியிருந்தது.
இதைப் பார்த்த மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். போலீசாருக்கு இந்த வீடியோ குறித்து புகார் வரவே, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில், திருவனந்தபுரத்தையடுத்து, குழிவிளாகம், புத்தன்வீட்டைச் சேர்ந்த மனு என்பவரை கொல்லங்கோடு போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
