"ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பாலே"..சாவி இப்போ திருடன் கைல - வைரலாகும் கமலின் பாடல் வரிகள்..!

Kamal Haasan Vikram Movie
By Thahir May 11, 2022 04:54 PM GMT
Report

நடிகர் கமல் நடித்துள்ள விக்ரம் படத்தின் பத்தல பத்தல என்ற பஃர்ஸ்ட் சிங்கிள் பாடல் இன்று வெளியானது. விக்ரம் திரைப்படம் வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிரூத் இசையில் உருவாகி உள்ள திரைப்படம் விக்ரம். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு உரிமையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு சொந்தமான ரென் ஜெயண்ட் மூவிஸ் கைப்படற்றியுள்ளது.

இந்த படத்தின் ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகியது.

அதன்படி, ஓடிடி உரிமையை டிஸ்னி ஹாட்ஸ்டார் பெற்றுள்ளது. சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி பெற்றுள்ளது. நடிகர் கமல்ஹாசன் எழுதி பாடியுள்ள 'பத்தல பத்தல' பாடல் இன்று (மே 11) வெளியாகும் என இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் அண்மையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்தநிலையில், நடிகர் கமல்ஹாசனின் கணீர் குரலில் 'பத்தல பத்தல' கஜானாலே காசில்லே.. கல்லாலையும் காசில்லே..பஃர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியானது.

தற்போது இந்த பாடல் வெளியான இரண்டு மணி நேரத்தில் யூடியூப்பில் 20 லட்சம் பார்வையாளர்களை இப்பாடலை பார்த்து ரசித்துள்ளனர். இந்த பாடல் சமூக வளைத்தலங்களில் வைரலாகி வருகிறது. 

 பாடல் வரிகள் இதோ;

பத்தல பத்தல குட்டியும் பத்தல, புட்டியும் பத்தல மத்தளம் ஆடுறானே! மத்தளம் ஆடுறானே!

குத்துற கும்மா, குத்துல கொம்மா பெத்த புள்ள நீ செத்துறவ டா டேய்...

நீ உதாரு விடாததே

இவன் வுட்டாலக்கடி ஜானு... இவன் முடிச்சவுக்கி பிரேமு..

ஒன்னாம் நம்பர் சொக்கா திருடி பிளேட் பக்கிரி மாமே...

 அது சரக்கடிக்கும் சோம்... இது சுண்டி சோறு தீனு..

வெள்ளா பவுடர் கோடு போட்டு மூக்கு உறிஞ்சும் டீம்மு...

டேய்.. பட்டி டிகரிங் செய்யாத.. கெட்ட பொம்பளைய நம்பி ஏமாந்து புடாத..

ராங் புடாத.. நீ நச்சுன்னு புராத.. நீ எத்தினி குடிச்சாலும் இங்க பட்டினி புடாதே..

கஜானாலே காசில்லே..

கல்லாலையும் காசில்லே..

காய்ச்சல் ஜூரம் நிறையா வருது தில்லாலங்கடி தில்லாலே..

ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பலே...

சாவி இப்ப திருடன் கையில தில்லாலங்கடி தில்லாலே..

ப்ளாட்டு போட்டு வித்தாக்கா..

நாறிபுடும் ஊரு சனம் சின்ன மழை வந்தாக்கா..

குள்ள நரி மாமு, கெடுப்பதிவன் கேமு குளம் இருந்தும் வலைதளத்துல ஜாதி பேசும் மீமு...

ஊசி போடு மாமே வீங்கிடும் பம்-பே 

பலே பலே பம்மே.. டேய்.. அத விட்டு ஒழி டா டேய்.. ஒரு குத்து விடு டா டேய்... பட்டா எவன் எதிர்த்தாலும்

கெத்தா எட்டி மிதி டா டேய்.. இத நக்கினு கொடு டா டேய்..

டேய்.. பட்டி டிகரிங் செய்யாத.. கெட்ட பொம்பளைய நம்பி ஏமாந்து புடாத..

ராங் புடாத.. நீ நச்சுன்னு புராத.. நீ எத்தினி குடிச்சாலும் இங்க பட்டினி புடாதே..

வா மா ஜானகி கூவு... லா லா லா

குத்துற கும்மா, குத்துல கொம்மா மிதப்புல நீ செத்துறவ டா டேய்...

நீ உதாரு விடாததே