நடிகை ராஷி கண்ணாவின் வைரல் க்ளிக்!
செம ஸ்டைலிஷ்ஷாக உள்ள நடிகை ராஷி கண்ணாவின் புதிய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் மற்றும் தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகையான ராஷி கண்ணா, இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
பின்னர் விஷாலுடன் அயோக்யா, ஜெயம் ரவியுடன் அடங்க மறு, விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்போது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் அரண்மனை 3 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பாலிவுட்டில் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருவதால் ராஷி கண்ணாவின் இந்தி மார்க்கெட் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் நடிகை ராஷி கண்ணா புதிய போட்டோஷூட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

செம ஸ்டைலிஷ்ஷாக இருக்கும் இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.