62 வயது மூதாட்டிக்கு கணவனான 25 வயது இளைஞன் - குழந்தைக்கு காத்திருக்கும் ஜோடி
37 வயது வித்தியாசத்தில் திருமணம் செய்துக் கொண்ட ஜோடி குறித்த செய்து வைரலாகி வருகிறது.
37 வயது வித்தியாசம்
ஜார்ஜியா நாட்டை சேர்ந்த குரான் மெக்கெய்ன் மற்றும் செரில் மெக்ரிகோர் என்ற தம்பதியினர் இணையத்தின் வைரல் டாப்பிக்காக இருந்து வருகின்றனர். ஏனென்றால், இருவருக்கும் இடையே சுமார் 37 வயதும் வித்தியாசம்.

குரான் மெக்கெய்ன் என்ற இளைஞருக்கு 25 வயதாகிறது. அவரது மனைவியாக இருக்கும் செரில் மெக்ரிகோர் என்பவருக்கு 62 வயதாகிறது. 2012ல் தான் இருவரும் ஒருவரையொருவர் சந்தித்துள்ளனர். அதன்பின் பல ஆண்டுகள் கடந்து 2020ல் மீண்டும் ஒரு கன்வீனியன் ஸ்டோரில் பார்த்து பேசியுள்ளனர்.
8வது குழந்தை
அது நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது. தொடர்ந்து, 2021 ஆம் ஆண்டில் இருவரும் திருமணம் செய்துள்ளனர். மேலும், இந்த தம்பதியினர் குழந்தைப் பெற்றுக்கொள்ளவும் முடிவு செய்துள்ளனர். ஆனால் மூதாட்டின் வயது காரணமாக தற்போது வாடகை தாய் மூலம் குழந்தை பிறக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

2023 ஆம் ஆண்டு வசந்த காலத்தின் பிற்பகுதியில் குழந்தை பெறப் போவதாக மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளனர்.
குரானுக்கு இது முதல் குழந்தை, செரிலுக்கு ஏற்கனவே 7 குழந்தையும், 1 பேரக் குழந்தையும் இருப்பது குறிப்பிடத்தக்கது.