விவசாயிகள் டிராக்டர் பேரணி வன்முறை - டெல்லி போலீசார் 22 வழக்குகள் பதிவு
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் கடந்த நவம்பர் மாதத்திலிருந்து பேராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனையடுத்து குடியரசு தினமான நேற்று ஒரு லட்சம் டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் முடிவு செய்திருந்தனர்.
இதற்கு டெல்லி போலீசார் அனுமதி கொடுத்தனர். விவசாயிகளின் ஒரு குழுவினர் தடுப்புகளை அகற்றிவிட்டு டெல்லிக்குள் நுழைய முயற்சி செய்தனர். அப்போது விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அது மோதலாக உருவானது.
டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் செங்கோட்டைக்குள் நுழைந்து, அங்குள்ள கோபுரத்தில் விவசாய கொடிகளை ஏற்றினர். இதனால் போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே சண்டை மூண்டது. இந்த கலவரத்தில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் விவசாயிகளும் காயமடைந்தனர்.
விவசாயிகள் பேரணி வன்முறையாக வெடித்த நிலையில், அது தொடர்பாக 22 வழக்குகள் தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் தகவல் அளித்துள்ளனர். திக்ரி எல்லையில் விவசாயிகள் மீண்டும் போராட்டம் நடத்த திரண்டுள்ளதால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.