கலவரமான தலைநகர் , டெல்லி அனுமன் ஜெயந்தி கலவரம் .. தாக்கப்பட்ட காவலர்கள் நடந்தது என்ன?

delhi violence hanumanjayanthi
By Irumporai Apr 17, 2022 05:02 AM GMT
Report

தலைநகர் டெல்லியில் ஜஹாங்கீர்புரியில் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. கல்வீச்சுத் தாக்குதலில் காவல்துறையினர் உள்பட பலர் காயமடைந்தனர்.

இந்தியாவில் தற்போது மதம் சார்ந்த மற்றும் தனி மனித தாக்குதல் அதிகரித்து வருவதாகவும் அதனை நாங்கள் கவனித்து வருகிறோம் என கடந்த சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்த நிலையில் தற்போது தலைநகர் டெல்லியிலும் மோசமான மதக்கலவரம் அங்கேறியிருக்கிறது.

நேற்று டெல்லி ஜஹாங்கீர் பகுதியில் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி விழாவில், இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. அனுமன் சிலை வைப்பது தொடர்பாக ஏற்பட்ட இந்த மோதலில் இரு தரப்பினரும் மாறி மாறி கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து நிகழ்விடத்திற்கு காவல்துறையினரும் விரைந்து வந்தனர். ஆனால் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினர் மீதும் கற்களை வீசி தாக்கியுள்ளனர். இதில் பல போலீஸார் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த வன்முறை தாக்குதலில் அங்கிருந்த கடைகள் அடித்து நொறுக்கப்பட்டதுடன் , வாகனக்களும் தீ வைத்து கொளுத்தப்பட்டன.

காயமடைந்த அனைவரும் பாபு ஜாக்விஜீவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். டெல்லியில் அரங்கேறிய வன்முறை சம்பவம் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

இந்த சம்பபவத்திற்கு கடும் கண்டணத்தை தெரிவித்துள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்:

தவறு செய்தவர்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதனையடுத்து அசசர பாதுகாப்பு படை வீரர்கள் கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர குவிக்கப்பட்டனர்

டெல்லி காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கலவரம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து அந்த பகுதியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்போது மட்டும் அங்கு 200 அவசர பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.