தப்பு செய்தால் யாரா இருந்தாலும் தண்டனைதான் : கைதிகளின் பற்களை பிடுங்கிய ஏ.எஸ்.பி சஸ்பெண்ட் - முதலமைச்சர் அதிரடி உத்தரவு
காவல்நிலையத்தில் விசாரணையின் போது பல்லை உடைத்த காவல் அதிகாரி மீது அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த்து .
கவன ஈர்ப்பு தீர்மானம்
திருநெல்வேலி அருகே பல்லை உடைத்து ஏஎஸ்பி சித்ரவதை செய்த புகார் குறித்து சட்டப்பேரவையில் அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா வலியுறுத்தினார்.
முதலமைச்சர் நடவடிக்கை
இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,காவல் நிலையங்களில் மனித உரிமை மீறல் சம்பவங்களில் எந்த விதமான சமரசங்களையும் திமுக அரசு செய்யாது. பல்லை சேதப்படுத்திய குற்றச்சாட்டிற்கு ஆளாகியிருக்கும் ஏ.எஸ்.பியை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டுள்ளேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த ஆட்சியில், குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் எந்தவித பாரபட்சமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர்ட்ஸ்டாலின் கூறினார்.