பெண்களிடம் அத்துமீறுபவர்கள் பாரபட்சமின்றி கொலை செய்யப்படுவார்கள் - சீறிய சீமான்!
பெண்களிடம் அத்துமீறுபவர்களை எனது ஆட்சியில் பாரபட்சமின்றி கொலை செய்யப்படுவார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்திருக்கிறார். திருவெற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக களமிறங்கியிருக்கிறார்.
இந்நிலையில், நேற்று இரவு திறந்த வேன் மூலமாக தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய சீமான், பெண்களிடம் பாலியல் அத்துமீறல், ஆசிட் வீச்சில் ஈடுபடுபவர்கள் யாரும் எனது ஆட்சியில் உயிரோடு இருக்க முடியாது. பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துவிட்டால், பெண்ணின் உடலை முதலில் நல்லடக்கம் செய்ய கூடாது.
குற்றவாளியை கொலை செய்துவிட்டு, பின்னர் பெண்ணின் உடலை நல்லடக்கம் செய்ய வேண்டும். பெண்களிடம் அத்துமீறும் நபர்களுக்கு எனது ஆட்சியில் இதுவே தண்டனை. எனது ஆட்சியில் நாடெங்கிலும் சி.சி.டி.வி காட்சியின் கண்காணிப்பில் கொண்டு வருவேன். வீட்டின் அறைகளை தவிர்த்து பிற இடங்களில் சி.சி.டி.வி கண்காணிப்பு கொண்டு வரப்படும்.
இதனால் பெண்களிடம் அத்துமீறுதல், செயின் பறிப்பது, திருடுவது போன்ற குற்றங்கள் செய்ய முடியவே முடியாது. அதுக்கு வாய்பில்லை ராஜா.
மீண்டும் இரட்டை இலை, உதயசூரியன் என வாக்கு செலுத்தினால் குஷ்டம் தான் வரும். உங்களின் கஷ்டம் தீராது என்றார்.