இளம் பெண்ணிடம் அத்துமீறிய வாலிபர் - நடுரோட்டில் நிர்வாணப்படுத்தி பொதுமக்கள் தர்மஅடி - அதிர்ச்சி வீடியோ
கர்நாடக மாநிலம், ஹாசன் பகுதியில் இளம் பெண்ணிடம் பொது இடத்தில் அத்துமீறி நடந்து கொண்டதாக கூறி பொதுமக்கள் மத்தியில் அந்த நபரை நிர்வாணப்படுத்தி தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருபவர் மேகராஜ். இவர் ஹாசன் நகரில் உள்ள மகாராஜா பூங்காவிற்கு குடிபோதையில் சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கிருந்த ஒரு பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது, அப்பெண் கூச்சல் போட்டு கத்தியுள்ளார். இவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த, அப்பகுதி பிரஜா சக்தி மாவட்ட தலைவர் பிரவீன் கவுடா மற்றும் சிலர் மேகராஜன் தாக்கியுள்ளனர்.
அந்த வாலிபரை நிர்வாணப்படுத்தி தர்ம அடி கொடுத்துள்ளனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இத்தகவலை அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பொதுமக்களிடமிருந்து இளைஞரை மீட்டனர். அத்துடன் அவரை தாக்கியதாக கூறப்படும் பிரஜா சக்தி மாவட்ட தலைவர் பிரவீன் கவுடா உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.