தமிழ்நாட்டில் ரூ.16,000 கோடி முதலீடு செய்யும் நிறுவனம் - முதமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி!

M K Stalin Tamil nadu DMK
By Jiyath Jan 07, 2024 05:17 AM GMT
Report

தமிழ்நாட்டில் ரூ.16,000 கோடி முதலீடு செய்யும் வின்ஃபாஸ்ட்  நிறுவனத்துக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

ரூ.16000 கோடி முதலீடு

உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று மற்றும் நாளை (ஜனவரி 7, 8) சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் ரூ.16,000 கோடி முதலீடு செய்யும் நிறுவனம் - முதமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி! | Vinfast Investing Rs16000 Crores In Tamilnadu

இந்த மாநாட்டில் வெளிநாடுகளிலிருந்து ஏராளமான தொழிலதிபர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். மேலும், பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளன. இந்நிலையில் வியட்நாம் மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான வின்ஃபாஸ்ட் ரூ.16000 கோடி தமிழ்நாட்டில் முதலீடு செய்ய உள்ளது.

தூத்துக்குடியில் அமையவுள்ள இந்த தொழிற்சாலையின் மூலம் தமிழ்நாட்டில் 3,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதற்கான ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கையெழுத்தாகிறது.

இதுகுறித்து முதலமைச்சர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் "உலகின் முன்னணி மின்வாகனத் தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்ட் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதை உறுதிசெய்துள்ளது.

மு.க. ஸ்டாலின் நன்றி

அனைவரது எதிர்பார்ப்புகளையும் விஞ்சி, 16,000 கோடி ரூபாய் மதிப்பில் தூத்துக்குடியில் ஈவிகார் மற்றும் மின்கலன் உற்பத்தித் தொழிற்சாலையை வின்ஃபாஸ்ட் நிறுவனம் அமைக்கவுள்ளது.

தமிழ்நாட்டில் ரூ.16,000 கோடி முதலீடு செய்யும் நிறுவனம் - முதமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி! | Vinfast Investing Rs16000 Crores In Tamilnadu

இது வெறும் முதலீடு அல்ல; தென்தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் ஒரு பெரும் பாய்ச்சல்! தமிழ்நாட்டில் நடைபெறும் நல்லாட்சி மீதும், நம் மாநிலத்தின் ஆற்றல்மிகு மனிதவளத்தின் மீது நம்பிக்கை கொண்டு இந்தப் பெரும் முதலீட்டை மேற்கொள்ளும்

வின்ஃபாஸ்ட் நிறுவனத்தாருக்குத் தமிழ்நாட்டின் முதலமைச்சராக எனது மனமார்ந்த நன்றிகள்! #TNGIM2024-இல் இன்னும் இதுபோன்ற பல வியத்தகு சாதனை அறிவிப்புகளைத் தொடர்ந்து எதிர்பார்த்திருங்கள்!" என்று பதிவிட்டுள்ளார்.