சர்க்கரை நோயாளியா நீங்கள்? துாங்குவதற்கு முன்பு இதை மட்டும் செய்யுங்கள்..!

Diabetes HealthTips Vinegar DiabetesPatients VinegarBenefits நீரிழிவுநோய் உடல்ஆரோக்கியம் சர்க்கரைநோயாளி சர்க்கரைஅளவு
By Thahir Mar 23, 2022 12:00 AM GMT
Report
110 Shares

ரத்தத்தில் சர்க்கரையின் சமநிலை தவறும்போது நீரிழிவு நோய் ஏற்படுகிறது. உணவில் இயற்கையாகவே இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் உணவகளை எடுத்துக்கொள்வதன் மூலம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம்.

நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், நீரிழிவு நோயின் சிக்கல்களைக் கட்டுப்படுத்த இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம்.

கட்டுப்பாடற்ற இரத்த சர்க்கரை அளவு உங்கள் உடலுக்கு பல வழிகளில் தீங்கு விளைவிக்கும். ஆனால் உங்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் சில எளிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை திறம்பட கட்டுப்படுத்த முடிவும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு இயற்கையாகவே இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க பல உணவுகள் உள்ளன. அதில் குறிப்பாக, ஆப்பிள் சைடர் வினிகர் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.

இது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவும். ஆப்பிள் சைடர் வினிகர் ஆரோக்கிய நன்மைகளை உள்ளடங்கியுள்ளது பொதுவாக எடை குறைப்புக்கு பயன்படுத்தப்படுகிறது.

ஆப்பிள் சைடர் வினிகர் பெரும்பாலும் பல்வேறு நிலைமைகளுக்கு வீட்டு தீர்வாகப் பயன்படுத்தப்படுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கும் ஆப்பிள் சைடர் எவ்வாறு உதவுகிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த ஆப்பிள் சைடர் வினிகரை எப்படி பயன்படுத்துவது என்பதை பார்ப்போம்.  '

நீரிழிவு நோய்:

நீரிழிவு நோய்க்கான ஆப்பிள் சைடர் வினிகரின் நன்மைகளை பல ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.. குறிப்பாக டைப்-2 நீரிழிவு நோய்க்கு இது மிகவும் நல்லது.

நீரிழிவு நோயாளிகளுக்கு ஆப்பிள் சைடர் வினிகரின் நன்மைகளை நிரூப்பி பல ஆய்வுகள் உள்ளன உணவியல் நிபுணரும் ஊட்டச்சத்து நிபுணர் ஒருவர் இது தொடர்பாக கூறுகையில்,

“நீரிழிவு நோய் என்பது உடலில் இன்சுலினை உற்பத்தி செய்து, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சரியான முறையில் நிர்வகிக்க முடியாத ஒரு நாள்பட்ட நிலையாகும்.

ஆப்பிள் சீடர் வினிகர் எடையைக் குறைக்கவும், தொப்பையைக் குறைக்கவும் உதவுவது மட்டுமல்லாமல், இரத்தச் சர்க்கரையைக் குறைக்கவும் உதவுகிறது. 

 ஆப்பிள் சைடர் வினிகர் குடிக்க சிறந்த நேரம் எது?

“நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த தூங்குவதற்கு முன் ஆப்பிள் சைடர் வினிகரை உட்கொள்வது நல்லது.

தூங்கும் முன் ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை வெந்நீரில் எடுத்துக்கொள்வது நீரிழிவு நோயாளிக்கு பெரிய நன்மையாகும்.

சர்க்கரை நோய்க்கு ஆப்பிள் சைடர் வினிகரை எப்படி சாப்பிடுவது?

ஒரு கிளாஸ் தண்ணீரில் இரண்டு தேக்கரண்டி வினிகர் சேர்க்கவும். ஆப்பிள் சைடர் வினிகரை நேராக குடிக்க வேண்டாம். உங்கள் உணவில் ஆப்பிள் சைடர் வினிகரைச் சேர்ப்பதற்கு முன்,

இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உங்கள் மருத்துவரிடம் ஒருமுறை சரிபார்க்கவும். ஆப்பிள் சைடர் வினிகர் உங்களுக்கு சிறிது நிவாரணம் அளிக்கும்,

ஆனால் நீங்கள் சரியான உணவு, வழக்கமான உடற்பயிற்சியை உறுதி செய்ய வேண்டும் மற்றும் இரத்த சர்க்கரை அளவை சிறப்பாக நிர்வகிக்க உங்கள் மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.