24 காரட் தங்க முலாம் பூசப்பட்ட கொழுக்கட்டை
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு நாசிக்கில் விற்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட கொழுக்கட்டை வைரலானது.
மகாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள சாகர் ஸ்வீட்ஸ் என்ற கடையில் தங்க முலாம் பூசப்பட்ட கொழுக்கட்டை விற்பனைக்கு வைக்கப்பட்டது.
2021ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு இக்கொழுக்கட்டை விற்பனையாகிறது.

24 காரட் தங்க முலாம் பூசப்பட்ட இக்கொழுக்கட்டையின் விலை கிலோ ஒன்றுக்கு 27,000 ரூபாயாகும்.
விலை அதிகம் என்றாலும் கொழுக்கட்டையின் தரம் மற்றும் தனித்துவமான தோற்றம் காரணமாக வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
முந்திரி, பாதாம், பிஸ்தா, பாலாடைக்கட்டி, குங்குமப்பூ, ஏலக்காய் தூள், நெய் உள்ளிட்ட பொருட்களை கொண்டு கொழுக்கட்டை தயார் செய்யப்படுகிறது.
மிக முக்கியமாக சாப்பிடக்கூடிய 24 காரட் தூய்மையான தங்க முலாம் பூசப்படுகிறது, இது ரத்தத்தில் கலக்காமல் செரிமான மண்டலம் வழியாக அப்படியே கழிவாக வெளியேறுமாம்.
இலங்கை சாரணர் சங்கத்தின் 11வது தேசிய ஜம்போரி : உத்தியோகபூர்வ இலச்சினை ஜனாதிபதியின் தலைமையில் வெளியிடப்பட்டது IBC Tamil
நள்ளிரவில் வெடித்துச் சிதறியது குளிர்சாதனப்பெட்டி : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் தீயில் கருகி பலி IBC Tamil
ஈரானின் தாக்குதலில் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பேரிழப்பு : முதன்முதலில் பென்டகன் வெளியிட்ட அறிவிப்பு IBC Tamil