விநாயகர் சதுர்த்திக்கு சொந்த ஊருக்கு போறீங்களா ? அப்போ இதை பாருங்க..

Tamil nadu Festival Vinayagar Chaturthi
By Vidhya Senthil Sep 05, 2024 03:15 AM GMT
Report

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கபடும் என்று அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

 விநாயகர் சதுர்த்தி

அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: நாளை (சுபமூகூர்த்தம்), செப்டம்பர் 7 (விநாயகர் சதுர்த்தி), செப்டம்பர் 8 (ஞாயிற்றுக்கிழமை) என்பதால் சென்னையிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமானோர் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விநாயகர் சதுர்த்திக்கு சொந்த ஊருக்கு போறீங்களா ? அப்போ இதை பாருங்க.. | Vinayagar Chaturthi Special Buses From Today In Tn

இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி,

முதல்வரின் முகவரி என்ற புதிய துறை உருவாக்கம் - தமிழக அரசு அசத்தல்

முதல்வரின் முகவரி என்ற புதிய துறை உருவாக்கம் - தமிழக அரசு அசத்தல்

தூத்துக்குடி, கோயம்புத்தூர சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு செப்.6,7,8 தேதிகளில் 1,755 பேருந்துகளும், செப்.6,7 தேதிகளில் சென்னை, கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 190 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகளும் இயக்கப்படும்.

சிறப்பு பேருந்துகள்

மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு 350 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 2,315 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பேருந்துகளில் www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் tnstc செயலி மூலமாக முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்திக்கு சொந்த ஊருக்கு போறீங்களா ? அப்போ இதை பாருங்க.. | Vinayagar Chaturthi Special Buses From Today In Tn 

சிறப்புப் பேருந்து இயக்கத்தை சிறப்புப் பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க குறிப்பிட்ட பேருந்து நிலையங்களில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அதே நேரம், ஞாயிறன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு திரும்புவதற்கு அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.