பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைக்கு தடை - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Tamil nadu Vinayagar Chaturthi Madras High Court
By Vidhya Senthil Sep 02, 2024 10:45 AM GMT
Report

விநாயகர் சதுர்த்திக்காக பிளாஸ்டர் ஆஃப் பாரிஸால் செய்யப்பட்ட சிலைகளை வைக்க அனுமதிக்கக்கூடாது எனக் காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி

ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி செப 7 ஆம் தேதி (சனிக் கிழமை) கொண்டாடப்பட உள்ளது.

பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைக்கு தடை - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! | Vinayagar Chaturthi Plaster Of Paris Statue Ban

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை கிராமத்தில் விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்கக் காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கு இன்று நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் விசாரணை வந்தது.

விநாயகர் சிலை ஊர்வலம் : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நிபந்தனை

விநாயகர் சிலை ஊர்வலம் : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நிபந்தனை

சென்னை உயர்நீதிமன்றம்

அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “மூன்று அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஒரே இடத்தில் சிலை வைக்க அனுமதி கோரியதால் அங்கு யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.வேறு இடத்தில் சிலை வைக்க அனுமதி கேட்டால் பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைக்கு தடை - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! | Vinayagar Chaturthi Plaster Of Paris Statue Ban

மேலும் பிளாஸ்டர் (Plaster of Paris) ஆஃப் பாரிஸால் செய்யப்பட்ட சிலைகளை வைக்க அனுமதிக்கக்கூடாது என்றும், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் அமைக்கப்பட உள்ள சிலைகளுக்கு மட்டுமே அனுமதிக்க வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.