விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு தடை ஏன் - முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
மக்களை பாதுகாக்கவே விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்று சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா இன்னும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை, மழைகால நிவாரணம் ரூ.5,000 வழங்கப்படுகிறது. அத்துடன் மேலும், ரூ.5,000ம் சேர்த்து ரூ.10 ஆயிரமாக வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அப்போது பா.ஜ., எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் விநாயகர் சதுர்த்தி வழிபாடு குறித்து எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக பதிலளித்துள்ளார். அதில், கொரோனா பரவல் காரணமாக வரும் 30ம் தேதி வரை மக்கள் கூடும் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுக்குள் வைத்திருக்க பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கவும், ஊர்வலத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
மேலும், கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. விநாயகர் சதுர்த்தியை பொது இடங்களில் கொண்டாட மட்டுமே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

கேரளாவில் ஓணம், பக்ரீத் பண்டிகைகளுக்கு பிறகு கொரோனா தொற்று அதிகரித்து உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா முழுமையாக கட்டுக்குள் வராததால், மக்களை பாதுகாக்கவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.