விநாயகர் சிலை ஊர்வலம் : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நிபந்தனை

By Irumporai Aug 31, 2022 06:16 AM GMT
Report

 விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு சில நிபந்தனைகளுடன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

இன்று நாடு முழுவதும் விநாயக சதுர்த்தி கொண்டாடப்படுகிறது,இந்த நிலையில் விநாயகர் சிலை கரைப்பின் போது சில நிபந்தனைகளுடன் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நிபந்தனைகள் :

விநாயகர் ஊர்வலத்தில் எந்தவிதமான ஆபாச நடனமோ, பேச்சோ இருக்கக்கூடாது.

விநாயகர் சிலை ஊர்வலம் : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நிபந்தனை | Vinayaga Chaturthi Madurai Court

எந்த அரசியல் கட்சி அல்லது மதத்துக்கும் ஆதரவாகவோ, எதிராகவோ ஃப்ளக்ஸ் போர்டுகள் வைக்கக் கூடாது

ஊர்வலத்தில் பங்கேற்பவர்கள் குட்கா, மதுபானங்கள் போன்ற போதைப்பொருட்களை உட்கொள்ளக்கூடாது.

விநாயகர் சிலை ஊர்வலம் : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நிபந்தனை | Vinayaga Chaturthi Madurai Court

மத நல்லிணக்கம் பாதிக்கப்படாத வகையில் விழா இருக்க வேண்டும்

அரசியல்கட்சி ,மதம் ,சமூகம் அல்லது சாதியினை குறிப்பிடும் வகையில் பாடல்களோ நடனமோ இருக்கக் கூடாது.