41 வயதான வினய்யுடன் காதலை உறுதி செய்த பிரபல நடிகை - ஃபோட்டோ வைரல்!

Vinay Tamil Cinema Indian Actress
By Sumathi 1 வாரம் முன்

நடிகை விமலா ராமன், நடிகர் வினய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

 நடிகர் வினய்

உன்னாலே உன்னாலே, என்றென்றும் புன்னகை போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தவர் நடிகர் வினய். தற்போது இவர் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

41 வயதான வினய்யுடன் காதலை உறுதி செய்த பிரபல நடிகை - ஃபோட்டோ வைரல்! | Vimala Raman Shared Pictures With Actor Vinay

இவரும் பிரபல மலையாள நடிகை விமலா ராமனும் காதலில் இருப்பதாக செய்திகள் பரவி வந்தது. இருவரும் ’டேம் 999’ என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில் நடிகை விமலா ராமன் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தனது பிறந்த நாளை கொண்டாடினர்.

காதல் உறுதி

அதன் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து கேப்ஷனாக, 23. 1. 23 என்ற தினத்தில் தனது பிறந்த நாள் வருவதை அடுத்து இந்த பிறந்தநாள் தனக்கு ஒரு ஸ்பெஷல். My Family என பகிர்ந்துள்ளார்.

அதில் வினய்யுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படமும் இருப்பது குறிப்பிடத்தக்கது.