மூதாட்டிக்கு 3வது டோஸ் கொரோனா தடுப்பூசி - அதிர்ந்து போன மக்கள்
திண்டிவனத்தில் சுகாதாரத்துறை ஊழியர்களின் அலட்சியத்தால் 70வயதான மூதாட்டிக்கு மூன்றாவது முறையாக தடுப்பூசி செலுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி வளாகத்தில் நேற்று காலை கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
திண்டிவனம் அடுத்த விட்டலாபுரத்தைச் சேர்ந்தவர் கண்ணாமா வயது 70.இவர் உடல் கடுமையாக வலி எடுப்பதாக கூறி மெகா தடுப்பூசி முகாமிற்கு சென்றுள்ளார்.
ஆனால் சுகாதாரத்துறையினர் அவருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.அவர் ஏற்கனவே இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் மூன்றாவது முறையாக கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.
இதையடுத்து முகாமிற்கு வந்த மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து அவரது மகன் சிவக்குமார் புகார் கூறியுள்ளார்.
இது குறித்து சிவக்குமார் கூறுகையில்: என்னுடைய தாயாருக்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன்புதான் இரண்டாவது தவனை தடுப்பூசி செலுத்தியதாகவும், நேற்று காலை நான் நிலத்திற்கு சென்றிருந்த நேரத்தில் என்னுடைய தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால் பொது இலவச மருத்துவ முகாம் என நினைத்து கொரோனா சிறப்பு முகாமிற்கு சென்றுள்ளார்.
அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் ஏற்கனவே ஒரு தடுப்பூசி போட்டுள்ளார் என்ற விவரத்தை கேட்காமல் அவருக்கு மூன்றாவது முறையாக தடுப்பூசி போட்டனர்.
இதுகுறித்து சார் ஆட்சியரிடம் கேட்டபோது திண்டிவனத்திற்கு சென்று மருத்துவர்களை பார்க்கும்படி கூறியதாகவும், திண்டிவனம் மருத்துவனை சென்று மருத்துவர்கள் தெரிவித்த போது தொலைபேசி என் கொடுத்து ஏதாவது பாதிப்பு என்றால் உடனடியாக தொடபுக்கொள்ள கூறியதாக தெரிவித்தார்.
சுகாதாரத்துறை ஊழியர்களின் அலட்சியத்தால் மூதாட்டிக்கு மூன்றாவது முறையாக தடுப்பூசி செலுத்திய சம்பவம் திண்டிவனத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.