சாவிலும் இணைபிரியாத தம்பதி - ஒன்றாகவே உயிரிழந்த கணவன் - மனைவி
விழுப்புரத்தில் மனைவி இறந்த அடுத்த நொடியே கணவனும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மேல்மலையனூர் கிராமத்தை சேர்ந்த பூங்காவனம் , தன் மனைவி எல்லம்மாளுடன் வசித்து வந்தார்.
இருவரும் வயது மூப்பு காரணமாக வீட்டிலேயே இருந்து வந்தனர். இவர்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் அதிகம் பாசம் கொண்டு வாழ்ந்து வந்ததை கண்டு கிராம மக்களே வியப்படைந்தனர்.
இந்த நிலையில் இன்று செல்லம்மாள் மூச்சு திணறல் காரணமாக பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த கணவர் பூங்காவனம் நொடி பொழிதில் உயிரிழந்துவிட்டார். இதனை கேட்ட அக்கிராமமே ஆச்சரியத்தில் உறைந்தனர். இருவரும் ஒன்றாக வாழ்ந்து, ஒன்றாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர், உயிரிழந்த தம்பதிகளுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
மேலும், அனைத்துக் கட்சி பிரமுகர்கள் பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.