அருப்புக்கோட்டை பேருந்து நிறுத்தம் வழியாக முகக்கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா பேருந்து நிறுத்தம் வழியாக முகக்கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா அலுவலக பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 52 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் அவ்வழியாக முகக்கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு ரூ 200 அபராதமும் விதிக்கப்பட்டது.
அருப்புக்கோட்டை நகராட்சி சார்பில் தினமும் ஒவ்வொரு பகுதிகளில் கொரோனா சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது இந்நிலையில் இன்று நகராட்சி ஆணையர் சாகுல் ஹமீது உத்தரவின் படி தாலுகா அலுவலக பேருந்து நிறுத்தத்தில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.
சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் தாலுகா அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் உள்பட 52நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் அவ்வழியாக முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் கார்கள் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்தவர்களுக்கு தலா ரூ 200 வீதம் அபராதம் விதித்ததுடன் கொரோனா குறித்த அறிவுரைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது மேலும் அபராதம் செலுத்திய நபர்கள் உள்பட உடன் வந்தோருக்கும் கொரோனா பரிசோதனையும்
செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.